10 கோடிக்கும் அதிக பண மோசடியில் ஈடுபட்ட 60 வயது மூதாட்டி!

0
102

இலங்கையின் பிரதான காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து , பொது மக்களிடம் பண மோசடி செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் பெலிஸ் மோசடி விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்ட மூதாட்டி ஏப்ரல் 11 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

60 வயதான ஐராங்கணி மல்லிகா பெர்னாண்டோ என்ற மூதாட்டி 10 கோடி ரூபாவுக்கும் அதிக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பெலிஸ் மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறினார்.

பணம் முதலீடு செய்யும் போது அதிக வட்டி வழங்குவதாக கூறி குறித்த மூதாட்டி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சந்தேகநபரான மூதாட்டிக்கு எதிராக தற்போது மிரிஹாண, பாணந்துறை, மொரட்டுவ பொலிஸ் விஷேட குற்றப் புலனாய்வு பிரிவுகளால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான தோன நிஷாத் தனுஷ்கவை இன்னும் கைது செய்யவில்லை என்றும், அவர் தலைமறைவாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.

தமது நிறுவனத்தின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபடுவதாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் முதலில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொது மக்களிடம் இருந்தும் முறைப்பாடுகள் கிடைத்ததாகவும், அதன்படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here