110 மாற்றுவலுவுள்ளோர் குடும்பங்களுக்கு உலருணவு வழங்கி வைப்பு

0
217
கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தைச் சேர்ந்த 110 குடும்பங்களுக்கு தலா நான்காயிரம் ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து சுவிஸ் சன்ரைஸ்  விளையாட்டுக் கழகத்தின் நிதி அனுசரணையில்  இவ் உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் தலைவர் சரவணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலக நிர்வாக அலுவலர் இராமமூர்த்தி, கரைச்சி சமூக சேவைகள் அலுவலர் ஆரணி ஆகியோர் கலந்துகொண்டு  மாற்றுத்திறனாளிகளுக்கான உலருணவுப்பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here