15 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த பெண்களைச் சராமரியாகத் தாக்கியுள்ளனர்.

0
93

வீடொன்றுக்குள் அத்துமீறி உள்நுழைந்து 15 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த பெண்களைச் சராமரியாகத் தாக்கியுள்ளனர். யாழ். சாவகச்சேரியில் உள்ள ஓர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,குறித்த கும்பல் வாள்கள், கொட்டன்கள் சகிதம் வீட்டிற்குள் உள்நுழைந்துள்ளதுடன் அங்கிருந்த பெண்களை வீதிக்கு இழுத்து வந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கும்பலின் அடாவடியான செயலைத் தட்டிக் கேட்கச் சென்ற அயலவர்கள் இருவரின் மீது குறித்த கும்பல் நடாத்திய தாக்குதலில் அவர்களின் தலைகள் உடைந்துள்ளன.

மேற்படி தாக்குதல் சம்பவங்களால் பலரும் படுகாயமடைந்துள்ள நிலையில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேற்படி சம்பவங்கள் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here