நடிகை ரெஜினாவுக்கு நடுவீதியில் நடந்த கொடுமை

0
143

தமிழ் சினிமாவில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா.

இவர் நடிப்பில் கடந்த வாரம் ‘சந்திரமௌலி திரைப்படம் வௌியாகியிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் அவர் தனியாக வீதியில் நடந்து செல்லும் போது இடம்பெற்ற மோசமான சம்பவமொன்று தொடர்பில் பேட்டியொன்றில் பேசியுள்ளார்.

இரவு 8 மணியளவில் அவர் நடந்து சென்றுகொண்டிருந்த போது எதிரில் வந்த ஆண் ஒருவர் கையை வீசி நடந்துவந்துள்ளார்.

அருகில் வந்தபோது அவர் கை ரெஜினாவின் வயிற்றின் மீது இடித்துள்ளது. அப்படி செய்துவிட்டு அவன் பொறுமையாக நடந்து சென்றுள்ளான்.

கோபத்தில் இருந்த ரெஜினா ஓடிசென்று அவன் முதுகில் வேகமாக ஒரு அடி கொடுத்துள்ளார். அதை எதிர்பார்க்காத அவன் அங்கிருந்து திரும்பி பார்க்காமல் ஓடியதாக நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here