ஆப்கானிஸ்தான் டி20 போட்டியில் புதிய உலக சாதயை நிலைநாட்டியது!

0
61

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், ஆப்கானிஸ்தான் 278 ஓட்டங்களை குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன.

இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஹஸ்ரத்துல்லா ஷாஷை, உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர்.

ஹஸ்ரத்துல்லாவின் அதிரடி சதத்தால் ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here