அவுஸ்திரேலியா 162 ஓட்டங்களால் முன்னிலை

0
39
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 162 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை 144 ஓட்டங்களையும் அவுஸ்திரேலியா 323 ஓட்டங்களையும் பெற்றதுடன், இரண்டாம் இன்னிங்ஸில் இலங்கை ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பிரிஸ்பேனில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டியின் இரண்டாம் நாளான இன்று 2 விக்கெட் இழப்பிற்கு 72 ஓட்டங்களுடன் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

மார்க்கஸ் லெபுஷேன் 81 ஓட்டங்களையும் ட்ருவிஸ் ஹெட் 84 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணி 323 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது.

சுரங்க லக்மால் 5 விக்கெட்களையும் டில்ருவன் பெரேரா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

179 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை 17 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

திமுத் கருணாரத்ன 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here