சுண்டிக்குளம் பகுதியில் ஒருதொகுதி கேரள கஞ்சாவுடன் மூவர் கைது 

0
267
கிளிநொச்சி  உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட சட்டவிரோத செயற்பாடுகள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் மற்றும் கல்லாறு இளைஞர்களின் உதவியுடன் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் செய்த பொழுது  சுட்டிக்குளம் சாளை பகுதியில் வைத்து சூட்சுமமாக வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட சுமார் நூற்றி பத்தின் ஐந்து கிலோ கிராம் கஞ்சாவினை மீட்டதுடன்   வாகன சாரதி உட்ப்பட மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்
குறித்த சம்பவம் இன்று காலை ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது கடல்வழியாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பின்னர் சுண்டிக்குளம் கடற்கரையில் இறக்கப்பட்டு சாளை ஊடாக வாகனத்தில் கடத்தப்பட்ட போதே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த தேடுதல் பணிக்காக பொலிஸ் குற்றத் தடகவியல் பொலிசாரின் மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சிப் பொலிசார் இணைத்து மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here