கஞ்சா விற்பனை செய்வது சட்டபூர்வ அனுமதி!

0
207

கேளிக்கைக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டம் கனடா
நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பல நிலைகளை கடந்து வந்திருந்த இந்த சட்டம் கடைசியாக செவ்வாய்க்கிழமையன்று அந்நாட்டின் செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில் 52–29 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது.

கஞ்சாவை வளர்ப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது வரையிலான அம்சங்கள் சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல்களை இந்த சட்டம் அளிக்கிறது.

ஜி7 நாடுகளில் கஞ்சாவை உற்சாக பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் முதல் நாடு என்ற பெயரை கனடா பெற்றுள்ளது.

புதிய சட்டத்தின் மூலம் வயது குறைந்தோர் கஞ்சாவை எளிதில் பெற இயலாது. அதே நேரத்தில் கஞ்சா தொடர்பான குற்றங்களும் குறையும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முற்போக்குக் கட்சியினர் கருதுகின்றனர்.

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாவை பயன்படுத்துவது கனடாவில் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here