முல்லைத்தீவின் வெள்ள நிலைமைகள் தொடர்பில் வடக்கு ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

0
94

அண்மையில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது

அந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வடக்குமாகான ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவர்களது தலைமையில் நடைபெற்றது

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் பிரதேச செயலாளர்கள் பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இதன்போது மக்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்புக்கள் தொடர்பிலும் இதுவரை அவர்களுக்கு ஏற்ப்படுத்தி கொடுக்கப்பட்ட வசதி வாய்ப்புக்கள் தொடர்பிலும் அவர்கள் வீடுகளுக்கு திரும்ப செய்யவேண்டிய விடயங்கள் வாழ்வாதார உதவிகள் தொடர்பிலும்  இதுவரை கிடைக்கபெற்ற விடயங்கள் தேவையானவை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் தேவைப்பாடுகள் தொடர்பான  சரியான விபரங்களை உடனடியாக சேகரிக்குமாறும் ஆளுனரால் ஆலோசனைகள் வழங்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here