இந்தியாவின் ஜெட் விமானத்தை சுட்டுவீழ்த்தியது பாகிஸ்தான்!

0
42

மத்திய காஷ்மீரின் பட்கம் மாவட்டத்தில் உள்ள கரேண்ட் கலன் பகுதியில் இந்திய விமானப் படை விமானம் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது இரண்டு விமானிகள் பலியாகினர் என்று போலீஸ் வட்டாரங்கள் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளன.

காலை சுமார் 10.40 மணியளவில், பட்கம் நகரிலிருந்து 7 கிமீ தூரத்தில், கரேண்ட் கலன் பகுதியில், இந்திய விமானப் படை விமானம் விழுந்து நொறுங்கியது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் விமானி மற்றும் துணை விமானி இருவரும் உயிரிழந்தனர் என்று அவர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து விசாரிக்க போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்து இரண்டு விமானிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

இதற்கிடையில் கார்கில் பகுதியில் மேலும் ஒரு ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிகிறது. ஆனால், அதிகாரிகள் அதனை உறுதிப்படுத்தவில்லை.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்க தயாராக இருந்த விமானங்கள் அமிர்தசரஸுக்கு திருப்பி விடப்பட்டன. ’விமானப் படையின் நடவடிக்கைகளால்’ இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்புகள் தெரிவிக்கின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here