பயங்கரவாதிகளின் தாக்குதலில் 40 பேர் பலி!

0
163

ஆப்கான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 40ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

முஹமத் நபியின் பிறந்தநாள் ஆண்டுதோறும் மீலாதுன் நபி என்னும் பெயரில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டின் மீலாதுன் நபி கொண்டாட்டங்கள் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் விமான நிலையத்துக்கு செல்லும் வீதியில் உள்ள உரனஸ் திருமண மண்டபத்தில் இன்று மீலாதுன் நபி விழா பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

மாலை சுமார் 6.15 மணியளவில் இங்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 60 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

40ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதல் இடம்பெற்றவேளை அரங்கில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களிற்கு மத்தியில் தற்கொலை குண்டுதாரி தன்னை வெடிக்கவைத்தார் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here