கிளிநொச்சிகுளம் கழிவுகள் நிறையும் இடமாக காணப்படுகிறது

0
129
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குளம் நகரின் கழிவுகள் கொட்டுகின்ற இடமாக காணப்படுகிறது என பலதரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
நகரின் மத்தியில் அமைந்துள்ள மருதமரங்களால் சூழப்பட்ட அழகிய இயற்கை  சூழலில் காணப்படுகின்ற குளமானது நகரின்  கழிவுகளும் சேர்ந்து அழுக்கான நிலையில் காணப்படுகிறது.
நகரின் பல இடங்களிலும் இருந்து கொண்டு செல்கின்ற பிளாஸ்ரிக்  கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுப் பொருட்களும் குளத்தின் நீரேந்து பகுதிகளில் கொட்டப்பட்டு வருவதோடு, குளத்திற்கு நீர் வருகின்ற வாய்கால்களிலும் பொது மக்களால் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்தக் கழிவுகள்  மழைக் காலங்களில் நீரில் அடித்துசெல்லப்பட்டு குளத்திற்குள் கொண்டு  சேர்க்கப்படுகிறது.
இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டும், சபை அமர்வில் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டும் நடவடிக்கை எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. என பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.
கிளிநொச்சி குளத்திலிருந்தே கிளிநொச்சி நகருக்கான குடி நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here