கள்ளக்காதலால் 1½ வயது குழந்தை கொடூர கொலை!

0
171

வாணியம்பாடியில் 1½ வயது குழந்தை கொன்ற தாய் – கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.

வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் நளினி. இவருக்கும் பெங்களூரை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் 7 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 குழந்தைகள். 3-வது குழந்தை ரித்திகா (வயது 1½) பெங்களூரில் குடும்பம் நடத்தி வந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முரளி என்பவருடன் நளினிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட தகராறில் கணவரை பிரிந்து வாணியம்பாடிக்கு வந்தார். நேற்று முன்தினம் நளினி வீட்டுக்கு முரளி வந்திருந்தார். அப்போது நளினி கடைக்கு சென்று விட்டார். திரும்பி வந்த போது குழந்தை ரித்திகா உடலில் காயத்துடன் உயிருக்கு போராடியது.

வாணியம்பாடி அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். வழியில் குழந்தை இறந்து விட்டது. வாணியம்பாடி டவுன் பொலிஸார் குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து நளினி அவரது கள்ளக்காதலன் முரளி ஆகியோரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். இதில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து பொலிஸார் நளினி, முரளியை கைது செய்தனர். குழந்தைக்கு பாலியல் தொல்லை செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here