கிம் ஜோங் உன்னும் சிங்கப்பூரை வந்தடைந்தார்.

0
109

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன், வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இரண்டு நாட்களுக்கு முன்னரே சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்- வட கொரிய ஜனாதிபதி கிம் சந்திப்பு, சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெற உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியை வட கொரியா ஜனாதிபதி சந்திக்க உள்ளது இதுவே முதல் முறையாகும்.

“அமைதியை ஏற்படுத்த வட கொரிய ஜனாதிபதி கிம்மிற்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பு இது” என்று முன்னதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிங்கப்பூர் சென்றடைந்த கிம்மின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்.

பேச்சுவார்த்தைகளின் முடிவில் கிம், அணுஆயுதங்களை கைவிட்டு விடுவார் என்று அமெரிக்கா நம்புகிறது.

கடந்த 18 மாதங்களாக ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஆகியோர் இடையே அசாதாரண உறவு நிலவியது.

உச்சிமாநாடு நடைபெறுவதற்கு முன்பாக, இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்திக்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here