“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் நிறைவு வைபவம் ஜனாதிபதி தலைமையில்….

0
9

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் நிறைவு வைபவம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (12) முற்பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.

மாவட்ட மக்களுக்கு 5000 தென்னங் கன்றுகளும், 5000 மர முந்திரிகை கன்றுகள் பகிர்ந்தளித்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கான கடனுதவி, இராணுவ வீரர்களுக்கான வீட்டுக் கடனுதவி, பேண்தகு பாடசாலை அபிவிருத்தி செயற்திட்டத்தின் பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளித்தல், விவசாய ஓய்வூதிய திட்டத்தை வழங்குதல், வணக்க ஸ்தலங்களுக்கான நிதியுதவி, மருத்துவமனை அபிவிருத்திக்கான உபகரணங்களை வழங்குதல், குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய செயற்திட்டத்தின் கீழ் சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் உள்ள இரு பிள்ளைகளை அவர்களது குடும்பங்களுடன் மீளிணைத்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் இதன்போது இடம்பெற்றன.

அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர்கள் வியாழேந்திரன், ஜி.சிறிநேசன், எஸ்.யோகேஸ்வரன் உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here