முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச

0
188

திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது

அந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மன்னாகண்டல் பகுதியில் நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச  மற்றும் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் கலந்துரையாடினர்

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பல மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் அவர்களுக்கான எவ்வாறான சேவையை உதவிகளை செய்யமுடியும் என்று பார்வையிட மக்கள் தற்போது தங்கியுள்ள முகாம்கள் அவர்களது பாதிக்கப்பட்ட வீடுகள் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய நாம் இங்கு வந்தோம்

இந்த இடத்தில் நான் அனைவருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கிறேன் இவர்களுக்கு உதவ வருமாறு இவர்களுடைய சொத்துக்கள் அனைத்தும் இழந்து துன்பப்படுகின்றனர் இவர்களது வாசல்கள் வீடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது எனவே இவர்களுக்கு அனைவரும் சேர்ந்து உதவமுடியும் எனவே அனைவரும் இணைந்து மக்களுக்கு உதவுமாறு கோரினார்

இங்கு கருத்து தெரிவித்தபாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கலில்  என்னுடைய அழைப்பின் பேரிலே கௌரவ  நாமல் ராஜபக்ச அவர்கள் தெற்கிலிருந்து வந்து  அவர்களுடைய நண்பர்களையும் அழைத்துக்கொண்டு எங்களுடைய மக்களுடைய வேதனைகள் தற்போது இடம்பெயர்ந்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து அவர்களுடைய வசிக்கும் இடத்தை இழந்து படும் வேதனையை பார்த்து அவர்களுக்கான ஆதரவை கொடுத்து அவர்களுக்கு முடியுமான உதவிப்பொருட்களை குடுக்கிரார்கள் இது ஒரு அடையாளமாக குறிப்பாக தெற்கிலிருந்து கிழக்கிலிருந்து மேற்கிலிருந்து எல்லா திசைகளிலும் நாடு முழுவதும் இருக்கின்ற மக்கள் இங்குள்ள மக்கள் இன்னும் இயல்பு வாழ்வுக்கு போவதற்கு தேவையான உதவிகளை செய்ய முன்வரவேண்டும் என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here