ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா!

0
85

நடிகை ஓவியா தொடர்ந்து கலகலப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் புகழின் உச்சத்துக்கே போனார். அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் எந்த படமும் ரிலீசாகவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே ஓவியா நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ரெஜினா கதாநாயகி என்றாலும் கதையை நகர்த்தும் ஒரு கவுரவ வேடத்தில் ஓவியா நடித்துள்ளார். ஓவியாவுக்கு விஷ்ணு விஷாலுடன் ஒரு பாடலும் இருக்கிறது. ஓவியா அடுத்து தனது நண்பரான ஆரவ் நடிக்கும் ராஜபீமா படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.

ஓவியாவின் ரசிகர்களோ ஓவியா இதுபோல கவுரவ வேடங்களாகவே நடிக்காமல் கதாநாயகியாகவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதற்கிடையே ஓவியா கதாநாயகியாக நடிக்கும் 90 எம்.எல். படத்துக்காக சிம்பு இசையமைக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here