மீண்டும் ஒரு யுத்தம் எமக்கு வேண்டாம் என்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

0
403

பொலிஸார் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் அமைதியான முறையில் பயணித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரியும் முன்னாள் போராளிகள்! எம்மை சாட்டி அரசியல் செய்து மீண்டும் பாதாளத்துக்குள் தள்ளிவிடவேண்டாம் என் தங்களின் கருத்துக்களை தெரிவிதார்கள்.

மட்டக்களப்பு வவுணதீவு பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நவம்பர் 30 ஆம் திகதி மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாட்டின் இன ஒற்றுமைக்கும், சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தி மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என வலியுறுத்தி கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கனகபுரம் உதயநகர் சந்தியில் இருந்து ஆரம்பித்து டிப்போ சந்தி வரை ஆர்ப்பாட்டம் சென்றடைந்தமை குறிப்பிட தக்கவிடயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here