மனித உரிமைகள் பேரவையிக்கும் அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை!

0
96

47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக, ஐக்கிய நாடுகளுக்கான அதன் தூதுவர் நிக்கி ஹலே அறிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையானது, பாசாங்குத்தனமாக செயற்படுவதாகவும், மனித உரிமைகள் விடயத்தை கேலிக்கூத்தாக்கி இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு மனித உரிமைகள் பேரவையில் மேலோங்கியுள்ளமையே அமெரிக்காவின் இந்த தீர்மானத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ், அமெரிக்கா தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவையில் நிலைக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் மனித உரிமைகள் விடயத்தில் அமெரிக்க முன்னோக்கி செல்ல வேண்டுமே தவிர, பின்னோக்கி செல்லக்கூடாது என்று மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here